Random image

தாய்லாந்து : குகையில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற கடற்படை வீரர் மரணம்

சியாங் ராய், தாய்லாந்து

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கியுள்ளவர்களை மீட்கச் சென்ற கடற்படை வீரர்களில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

தாய்லாந்து நாட்டின் கால்பந்து பயிற்சியாளர் ஒருவ்ர் தனது 12 மாணவர்களுடன் சியாங் ராய் பகுதிக்கு சுற்றுலா சென்றார்.   சுமார் 11 முதல் 16 வரை உயதுடைய இந்த மாணவர்களுடன் அவர் அந்தப்பகுதியில் உள்ள தம்லாங் குகைக்குள் சென்றுள்ளார்.   அப்போது திடீரென பெருமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது.   அதனால் வெள்ளம் புகுந்த அந்த குகையினுள் அவர்கள் 13 பேரும் சிக்கிக் கொண்டனர்.

மீட்புக் குழுவினர் அவர்களை தேடி வந்துள்ளனர்,   குகை வாயிலில் இருந்த அவர்கள் மிதிவண்டி உள்ளிட்ட பொருட்களை வைத்து அவர்கள் குகையினுள் சிக்கி உள்ளதை கண்டறிந்தனர்.   ஆயினும் கன மழை தொடன்ர்ஹ்டதால் அவர்களை மீட்பதில் சிரமமுண்டாகியது.   இதனால் நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

சுமார் 9 நாட்களுக்குப் பின் மீட்புப் பணி தொடங்கியது.   அத்துடன் மழை நின்றுள்ளதால் தேடுதல் பணி முழு மூச்சில் ஆரம்பித்தது.   அவர்கள் இத்தனை நாட்கள் உயிர் பிழத்திருப்பது கடினம் என அஞ்சபடுகிறது.    தேடுதல் பயிற்சியில் ஈடுபட்ட நீச்சல் வீரர் ஒருவர் இந்த 13 பேரும் உயிருடன் இருப்பதை கண்டறிந்து வீடியோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.   அவர்கள் இருக்குமிடம் தெரிந்தும் சகதி மற்றும் வெள்ள நீரில் நீந்தி வர சரியான பயிற்சி இன்று 13 பேரை அழைத்து வர முடியாது என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு உடனடியாக உணவு, மருந்து உள்ளிட்ட முக்கியப் பொருட்கள் அனுப்பப் பட்டுளன.   வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு கடற்படையை சேர்ந்த 38 வயதான குணான் என்னும் வீரர் பொருட்களை அளித்து விட்டு திரும்பி வரும் வழியில் ஆக்சிஜன் குறைவால் மயக்கம் அடைந்துள்ளார்.  அவரை சோதித்த போது அவர் மரணம் அடைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.