நீலத் திமிங்கலத்துடன் செல்பி – வைரலாகும் வீடியோ

ஆழ்கடலில் திமிங்கலத்துடன் ஒருவர் செல்பி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமிங்கலத்துடன் இருந்த நிமிடங்கள் உணர்வுபூர்வமாக இருந்ததாகவும், இருவருக்குமிடையே ஒரு பந்தம் ஏற்பட்டதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

selfie-with-blue-whale

ஆடம் ஸ்டெர்ம் என்பவர் ஆழ்கடல் வரை சென்று நீந்துபவர். இருவர் இம்மாதம் 4ம் தேதி டொங்கா நாட்டில் உள்ள நுக்கு அலோஃபா கடலின் ஆழத்தில் சென்றார். அப்போது அங்கு இருந்த திமிங்கலத்துடன் செல்ஃபி வீடியோ ஒன்றையும் எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆடம் ஸ்டெர்ம் கூறுகையில். “ நாங்கள் ஆழ்கடலில் நீந்திக் கொண்டு பாடினோம், அப்போது எங்கள் அருகில் பெண் திமிங்கலம் ஒன்று வந்தது. நாங்கள் அதனை பார்த்ததும் நீரில் சுழன்று காட்டினோம், எங்களை பார்த்து அந்த திமிங்கலமும் சுழன்றது. அது எங்களுடன் அரை மணி நேரம் நடனம் ஆடியது. திமிங்கலத்துடன் நாங்கள் இருந்த நிமிடங்கள் உணர்வுப்பூர்வமானது. எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு பந்தம் ஏற்பட்டது “ என்று உணர்வுப்பூர்வமாக கூறினார்.