பிரிவினை அரசியல் நடக்கிறது, இருப்பினும் ஒன்றுபட்டு இருக்கிறோம் – ஏ.ஆர் ரஹ்மான்

‘ஏகம் சாட் ஒற்றுமை இசை நிகழ்ச்சி: 50 வது சிம்பொனி’ நிகழ்ச்சியில் (‘Ekam Satt Unity Concert: The 50th Symphony’) பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அமேயா டப்ளி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானிடம் பிரிவினை அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ”

“பிரிவினை அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. எனினும் மக்கள் ஒற்றுமையால் கட்டப்படுகிறார்கள். நாம் அனைவரும் நம்பிக்கையையும், அறிவையும் பகிர்வதில்தான் அமைதி கொள்கிறோம். பள்ளிக் குழந்தைகளை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளலாம். சொன்ன விஷயத்தை மறுபடியும் அவர்களிடத்தில் சொன்னால், ஏற்கனவே சொன்னதை நீங்கள் சொல்லவேண்டாம் என பதில் அளிப்பார்கள். உண்மையை அவரவர்களே அறிந்துகொள்ளவேண்டும். அதுதான் சிறந்த விஷயமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி