பிரதமர் மோடியை பறவையின் எச்சம் என விமர்சித்த திவ்யா ஸ்பந்தனா
பெங்களூரு
சர்தார் படேல் சிலை அடியில் மோடி நிற்கும் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமர்சித்துள்ளது டிவிட்டரில் சர்ச்சையைஏற்படுத்தி உள்ளது.
உலகின் மிக உயரமான சிலையான சர்தார் படேல் சிலையை நேர்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவை ஒட்டி அவர் நின்றுக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது. அந்த புகைப்படம் சிலையின் பிரம்மாண்டத்தை காட்ட வெளியிட்ப்பட்டது.
சிலையின் கால்கள் நடுவில் மோடி மிகவும் சிறிய உருவமாக நின்றுக் கொண்டிருப்பது போல் அமைந்துள்ள இப்புகைப்படம் சமூக வலை தளங்களில் பெரிதும் பரவி வைரலானது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான ரம்யா என்னும் திவ்யா ஸ்பந்தனா தனது டிவிட்டரில் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் அந்த பதிவில் மோடி குறித்து, “அது என்ன பறவையின் எச்சமா?” என விமர்சித்துள்ளார். திவ்யாவின் இந்த டிவிட் 3800 லைக்குகளையும் 1200 மறு பதிவையும் பெற்றுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் இடையே இரு வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.
ஒரு சாரார் இது திவ்யாவின் நகைச்சுவை உணர்வை காட்டுவதாகவும் மற்றொரு சாரார் இதன் மூலம் திவ்யா நாட்டின் பிரதமரை அவமானப்படுத்துவதாகவும் கருத்துக்களால் அவர் பதிவை நிரப்பி வருகின்றனர்.
பாஜகவின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் திவ்யா ஸ்பந்தனாவின் டிவீட் சர்தார் படேல் மீதான வரலாற்று ரீதியான இழிவு எனவும் திவ்யாவுக்கு மோடி மீது எதிர்ப்பு உணர்வு ஒரு நோய்த் தொற்றாக உள்ளதாகவும் பதிந்துள்ளது.
ஏற்கனவே திவ்யா ஸ்பந்தனா பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக கடந்த செப்டம்பர் மாதம் தேச விரோத வழக்கு தொடரப்பட்டுள்ளது.