திவ்யதர்ஷினியின் ‘நான் இதைத்தான் நம்புகிறேன்’ கடிதம்….!

கொரோனா ஊரடங்கு காலத்தில் பிரபலங்கள் பலரும் நேரலை, ரசிகர்களுடனான கலந்துரையாடல், வீடியோக்கள் வெளியிடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு கால் முறிவு ஏற்பட்டு, வீட்டில் ஓய்வில் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட டிடி தற்போது குணமடைந்து தன்னைக் குறித்து ‘நான் இதைத்தான் நம்புகிறேன்’ என்ற பெயரில் ஒரு கடிதம் எழுதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் டிடி.

“உங்கள் மனம் உடையலாம்,

திருமணம் முறியலாம்,

உங்கள் நம்பிக்கையை மற்றவர்கள் உடைக்கலாம்,

உங்கள் குணத்தைப் பற்றி மற்றவர்கள் மோசமாகப் பேசலாம்,

ஆனால் என்ன ஆனாலும், நீங்கள் எப்படி உணர்ந்தாலும்,

தினமும் எழுந்து, உடை உடுத்தி, உங்கள் வேலைக்குச் சரியாகச் சென்றால்

நீங்கள் வெற்றி பெறுவீர்கள்…

உங்கள் பணியின் தரத்தை யாரும் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ள முடியாது”.

என டிடி தெரிவித்துள்ளார்.