தீபாவளி போனஸ்: ‘108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்குக்கு தடை! உயர்நீதி மன்றம்

சென்னை:

போனஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தீபாவளியன்று ‘108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது.

தமிழகம் முழுவதும்  சுமார் 950 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 4,500-க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி போனஸ் கேட்டு போராடி வருகின்றனர். ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் தனியார் நிறுவன மான ஜிபிகே-இஎம்ஆர் (GVK-EMRI) ஊழியர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராடி வரும் நிலையில், இந்த ஆண்டும்  30% தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை நிர்வாகம் எந்தவொரு பதிலும் தெரிவிக்கதாத நிலையில் , வரும் தீபாவளியன்று ஒருநாள் ஆதாவது, வரும் 5ம் தேதி இரவு 8 மணியிலிருந்து 6ம் தேதி இரவு 8 மணிவரை ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க மாட்டோம் என்று போராட்ட அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

இதற்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையினபோது, அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின்கீழ் ஆம்புலன்ஸ் சேவை வருவதால் ஸ்டிரைக் கூடாது என்று கூறி, ‘108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கிற்கு தடை விதித்தது.

கடந்த  2 ஆண்டுகளாக தீபாவளி நேரத்தில் 108 ஆம்புலஸ் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பதும், அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிப்பதும் தொடர்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.