சென்னை:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு பேருந்துகளில் இன்று முன்பதிவு தொடங்குகிறது.

இந்த வரும் தீபாவளி பண்டிகை 27.10.2019 (அக்டோபர்)  ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அதையொட்டி, சொந்த ஊருக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழக அரசு ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.

இந்த பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடங்குகிறது. அக்டோபடர் மாதம் 25ந்தேதிக்கு இன்று முன்பதிவு செய்யலாம்.

மேலும், www.tnstc.in என்ற இணையத்தளத்தில் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 2 தனியார் இணைய தளங்கள் மூலம் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில், இன்று அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்குகிறது.

மேலும் தீபாவளி பண்டிகையின்போது எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்குவது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாட்களில் சென்னை, புறநகர் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் அதனை குறைக்கும் வகையில், திட்டமிட்டு பேருந்துகளை இயக்குவது குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.