தீபாவளி தபால்தலை: அமெரிக்க தபால்துறை வெளியிட்டது.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்த தீபாவளி தபால்தலையை அமெரிக்க தபால்துறை வெளியிட்டுள்ளது

stamp3

சில ரோஜா இதழ்களுக்கு அருகே ஒரு அழகிய தீபம் எரிவதுபோல அந்த தபால்தலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை வடிவமைத்தவர் பெயர் சாலி ஆண்டர்சன்.

stamp2

இந்த தபால்தலை வெளிவர அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரிதும் உழைத்துள்ளனர். இந்திய தூதரக அதிகாரி ரிவா கங்குலி தாஸ் தனது கனவை நனவாக்கியதற்காக அமெரிக்க தபால்துறைக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

stamp4

தபால்தலை வெளியிடப்பட்டதும் ஏராளமான மக்கள் வரிசையில் நின்று அதை வாங்கிச் சென்றனர்.

stamp5

அமெரிக்காவில் ஸ்டாம்புகள் வடிவமைப்பதற்கென்று ஒரு கமிட்டி உள்ளது. அந்த கமிட்டிக்கு  ஸ்டாம்ப் வடிவமைப்பது தொடர்பாக கிட்டத்தட்ட 40,000 பரிந்துரைகள் வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து 25 பரிந்துரைகள் தெரிவு செய்யப்பட்டு போஸ்ட் மாஸ்டர் ஜெனரலின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவைகளில் ஒன்றுதான் இந்த தீபாவளி தபால்தலை ஆகும்.

கார்ட்டூன் கேலரி