கொரோனா அச்சுறுத்தலால் 150 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
திரையரங்குகள் திறப்புக்கு மத்திய அரசு அனுமதியளித்துவிட்டாலும், தமிழகத்தில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
அக்டோபர் 22-ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர் மகன்’, ஜீவா, அருள்நிதி நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’ மற்றும் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி, நடித்துள்ள ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்கள் தங்களது வெளியீட்டை உறுதி செய்துள்ளன.