தீபாவளி அதிரடி சலுகை : அமேசான் , ஃபிளிப்கார்ட் 70% வரை தள்ளுபடி அளிக்க வாய்ப்பு

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் தீபாவளி சலுகையை இதுவரை இல்லாத அளவுக்கு 70% வரை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது..

ஆன்லைன் மூலம் துணிகள், வீட்டு உபயோகள் பொருட்கள், லேப்டாம், கணினி, ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையாகின்றன. இத்தகைய ஆன்லைன் வர்த்தகத்தை அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனத்தை போட்டிப்போட்டுக் கொண்டு நடத்தி வருகின்றன.

amazon

தொழில் முறையில் போட்டிப்போடும் இரண்டு நிறுவனங்களும் ஒரிரு மாதங்களில் வரவுள்ள தீபாவளிக்கு முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு சிறப்பு தள்ளுபடிகளை வழங்க உள்ளன். தீபாவளி அக்டோபர் மாதம் வரவுள்ள நிலையில் தற்போது அதற்கான ஆடர்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் இந்நிறுவனங்கள் 20 லட்சம் ஆன்லைன் ஆர்டர்களை பெற்றன. இந்த ஆண்டு இது 30 லட்சமாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இரு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தீபாவளி சளுகையை 70 % வரை உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளில் இரு நிறுவனங்களும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.