தீபாவளி: கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை – தாம்பரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையிலிருந்து நெல்லைக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளன.

train

தீபாவளி பண்டிகை வரும் செவ்வாய் கிழமை கொண்டாடப்பட உள்ளது. வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து வேலைப்பார்க்கும் மக்கள் திங்கட் கிழமை மட்டும் விடுமுறை எடுத்துக் கொண்டு 4 நாள் விடுமுறையாக சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதன் காரணமாக சென்னையில் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் நாளை மக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிக்கும் விதமாக தமிழக போக்குவரத்து கழகம் தீபாவளியை முன்னிட்டு ஆயிரக்கணகான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இதேபோல் தெற்கு ரயில்வேயும் தீபாவளி சலுகை அளிக்கும் வகையில் சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. தாம்பரம் – நெல்லை, நெல்லை – தாம்பரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்குவதாக இன்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி வரும் 3ம் தேதி மற்றும் 5ம் தேதி தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு காலை 9.30 மணிக்கும், 4ம் தேதி மற்றும் 7ம் தேதி நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கும் காலை 7.10 மணிக்கு முன்பதிவு இல்லா ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.