தீபாவளி பண்டிகை: 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி, 7 சிறப்பு ரயில்களை இயக்குவதாக தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு இந்த சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை  அடுத்த மாதம் (நவம்பர்) 7ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை கொண்டாட நாடு முழுவதும் பணி நிமித்தமாக பல்வேறு இடங்களில் பணியாற்றி வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதன் காரணமாக ரயில் மற்றும் பேருந்துகளில் கடும்  மக்கள் கூட்டம் ஏற்படும்.

இதையொட்டி தமிழக அரசு ஏராளமான சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இந்த நிலையில், தென்னக ரயில்வேயும் 7 சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

சுவிதா சிறப்பு ரயில்: திருநெல்வேலி-தாம்பரம் 

நவம்பர் 8ம் தேதி மாலை 6.15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து  புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண்.82622), கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியே தாம்பரத்தை அடையும்.

சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்: தாம்பரம்-திருநெல்வேலி 

நவம்பர் 9ம் தேதி மாலை 3 மணியளவில், சென்னை தாம்பரத்திலிருந்து புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண் 06013), செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சதுர், கோவில்பட்டி வழியே திருநெல்வேலியை சென்றடையும்

சுவிதா சிறப்பு ரயில்: சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூர் 

நவம்பர் 3 ம் தேதி இரவு 8.40 மணிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண்.82619), அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் செல்லும்.

சுவிதா சிறப்பு ரயில்: கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல் 

நவம்பர் 6ம் தேதி, மாலை 7 மணிக்கு, கோயம்புத்தூரிலிருந்து புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண்.82620), திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியே சென்னை சென்ட்ரலைச் சென்றடையும்.

சிறப்பு கட்டண சிறப்பு ரயில்: சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் 

நவம்பர் 5ம் தேதி இரவு 8.40 மணிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண்.06017), அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் செல்லும்.

சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்: கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல் 

நவம்பர் 6ம் தேதி, மாலை 7 மணிக்கு, கோயம்புத்தூரிலிருந்து புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண். 06018), திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியே சென்னை சென்ட்ரலைச் சென்றடையும்.

எர்ணாகுளம்- யஸ்வந்த்பூர்: வாராந்திர ரயில் 

அக்டோபர் 17, 24, 31 மற்றும் நவம்பர் 7, 14 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்திலிருந்து யஸ்வந்த்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும். சரியாக மாலை 3 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்படும் இந்த ரயில், கிருஷ்ண ராஜபுரம், பங்காரபேட்டை, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, ஒட்டபலம், திருச்சூர், ஆலுவா வழியே எர்ணாகுளத்தைச் சென்றடையும்.

இவ்வாறு தென்னக ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.