வியன்னா ஓபன் டென்னிஸ் – தோல்வியடைந்து வெளியேறிய முக்கிய வீரர்கள்!

வியன்னா: ஆஸ்திரிய நாட்டில் நடைபெற்றுவரும் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிகளில், உலகின் நம்பர் 1 வீரர் ஜோகோவிக் மற்றும் ஆஸ்தி‍ரியாவின் டொமினிக் தியம் ஆகிய நட்சத்திர வீரர்கள் தோல்வியடைந்து வெளியேறினர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. அதில், ஒரு போட்டியில், ச‍ெர்பியாவின் ஜோகோவிக், உலக தரவரிசையில் 42வது இடத்திலுள்ள இத்தாலியின் லோரென்சோவுடன் மோதினார்.

ஆனால், இப்போட்டியில் 2-6, 1-6 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார் இந்தாண்டில் ஜோகோவிக்கின் 3வது தோல்வியாகும் இது.

மற்றொரு காலிறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், ரஷ்யாவின் ஆன்ட்ரி ரப்லேவ்வுடன் மோதினார். இப்போட்டியை 6-7, 2-6 என்ற செட் கணக்கில் இழந்த தியம், தொடரிலிருந்து வெளியேறினார். சொந்த மண்ணில் நடக்கும் ஒரு தொடரிலிருந்து அவர் தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.