LONDON, ENGLAND - NOVEMBER 09:  Novak Djokovic of Serbia hits a forehand in his men's singles match against Richard Gasquet of France during day six of the Barclays ATP World Tour Finals at O2 Arena on November 9, 2013 in London, England.  (Photo by Clive Brunskill/Getty Images)

லண்டனில் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. தரவரிசையில் உலகில் டாப்–8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டி, இரண்டு பிரிவுகளாக நடைபெற்று வருகிறது. ரவுண்ட் ராபின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீரர்களே அரைஇறுதிக்கு தகுதி அடைவார்கள்.

2–ம் நிலை வீரர், செர்பியாவை சேர்ந்தவரும், 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றவருமான நோவக் ஜோகோவிச் நேற்று முன்தினம் இரவு இவான்லென்டில் பிரிவில், ஒரு ஆட்டத்தில் 7–6 (8–6), 7–6 (7–5) என்ற புள்ளி கணக்கில் மிலோஸ் ராவ்னிக்கை தோற்கடித்தார். 2 வெற்றிகளுடன் முதல் வீரராக அரை இறுதிக்குள் இடம் பெற்றுள்ளார். ஜோகோவிச் இந்தப்போட்டியில் பட்டத்தை கைப்பறினால் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்து மீண்டும் முதலிடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில், தோல்வியடைந்த மிலோஸ் ராவ்னிக் கடைசி லீக்கில் வெற்றிபெற்றால், 2–வது வீரராக அரை இறுதிக்கு தகுதிபெறுவார்.