அமெரிக்க ஓபனில் நோவக் ஜோகோவிக் – பங்கேற்பதை உறுதிசெய்தார்!

பெல்கிரேட்: இம்மாதம் இறுதியில் தொடங்கவுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதை உறுதிசெய்துள்ளார் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிக்.

இவர், சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, பின்னர் அதிலிருந்து குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கொரோனா பரவல் மிகவும் மோசமாக இருப்பதால், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதிலிருந்து, ரஃபேல் நாடல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் ஏற்கனவே விலகிவிட்டனர்.

இந்நிலையில், ஜோகோவிக் பங்கேற்பரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தான் பங்கேற்பதை அவர் உறுதிசெய்துள்ளார். இது கடினமான மற்றும் சவாலான சூழலில் மேற்கொள்ளப்பட்ட முடிவு என்றுள்ளார் அவர்.