பிரதமர் மோடி தொகுதியில் அவலம்…. பசியால் புல்லை தின்னும் குழந்தைகள்….

புதுடெல்லி:

பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இதையடுத்து, அத்தியாவசிய சேவை வழங்கும் ஊழியர்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றனர். இதனால், தேசிய அளவில் அன்றாட பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பசி, பட்டினி படிப்படியாக தலை தூக்க தொடங்கியுள்ளது.

இதில் பிரதமரின் மக்களவை தொகுதியான வாரணாசியும் விதிவிலக்கல்ல.

இந்நிலையில் வாரணாசியில், குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து, உள்ளூர் மொழியில் “அக்ரி” என்று அழைக்கப்படும் புல் சாப்பிட்டு வருவது போன்று வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

முசாஹர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் ஐந்து வயதுடைய ஆறு குழந்தைகள் வாரணாசி மாவட்டத்தின் படகான் தொகுதியில் உள்ள கொயிர்பூர் கிராமத்தில் உள்ள முசாஹர் பஸ்தியில் வசிக்கின்றனர். ராணி, பூஜா, விஷால், நீர்ஹு, சோனி மற்றும் கோலு என்ற பெயர் கொண்ட அந்த குழந்தைகள் பசி காரணமாக புல்லை சாப்பிட்டு வருவதை காண முடிகிறது.

பொதுவாக கால்நடைகளுக்கு கொடுக்கும் புல்லை, பசி காரணமாக இவர்கள் சாப்பிட்டுவது தெளிவாக தெரிகிறது.

மற்றொரு வீடியோவில், குழந்தைகள் சாப்பிட்டு கொண்டிருக்கும் தட்டில் இருந்து, கால்நடைகளுக்கு சாப்பிட கொடுக்கப்பட்ட வைக்கோலுடன் இணைக்கப்பட்ட ஃபாலியன், சிறிய பீன் போன்ற புதர்கள் இருப்பது தெரிகிறது.

முசாஹ்ரி பஸ்தியில் வசிக்கும் பத்து குடும்பங்களில், பத்து வயதுக்குட்பட்ட பன்னிரண்டு குழந்தைகள் உள்ளனர். பெரும்பாலான குடும்பங்களின் சம்பாதிக்கும் உறுப்பினர்கள், தினசரி கூலியாகவே இருக்கின்றனர். இவர்கள் கட்டுமான தொழிற்சாலைகள் மற்றும் அருகிலுள்ள செங்கல் சூளைகளில் வேலை செய்பவர்கள். 144 தடை உத்தரவு காரணமாக போக்குவரத்தும் தடை பட்டுள்ளது. இதன் காரணமாக, தொழிலாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வேலை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் இருக்கின்றனர்.

கடந்த திங்கள் கிழமையன்று, ஊரடங்கு உத்தரவுக்கு ஒரு நாள் கழித்து, இந்த தொழிலாளர்களின் குழந்தைகள் பசியுடன் இருந்தனர். இந்நிலையில், கிராமத்தில் நடந்த இறுதி ஊர்வலத்திற்குப் பிறகு, குடும்பம் 13 வது நாள் சடங்கில் இருந்து எஞ்சிய உணவை உட்கொண்டு அந்த கிராமத்தினர் பசியாறினர். அடுத்த நாள், பசி எடுக்க, அருகில் உள்ள பண்ணைகளில் இருந்து உருளைக்கிழங்கை கொதிக்க மற்றும் சாப்பிட தொடங்கினர். புதன்கிழமை, வழக்கமாக கால்நடைகளுக்கு சாப்பிட வழங்கப்பட்ட புல்லை சாப்பிடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போய் விட்டது.

குழந்தைகள் பசியால் புல்லை சாப்பிடும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருவதை அடுத்து மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டது.

படகான் போலீஸ் நிலைய அதிகாரி சஞ்சய் குமார் சிங் புதன்கிழமை கிராமத்திற்குச் சென்று, கிராம மக்களுக்கு உதவ முன் வந்தார். அங்கு கிராம மக்களிடம் பேசிய அவர், நீங்கள் காவல் நிலையத்திற்கு அல்லது எஸ்.டி.எம். பிரதான் செல்லுங்கள். அவர் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால், நீங்கள் சிக்கலில் இருந்தால் எங்களிடம் வாருங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து கிராமத்தின் எஸ்.டி.எம் மற்றும் பிரதான் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்து சிறிது உணவை சேகரிக்க வேண்டும் என்றும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சிங் உறுதி அளித்தார். உள்ளூர் தகவல்களின்படி, வாரணாசி மாவட்ட நிர்வாகி ராஜ் சர்மா புதன்கிழமை சஞ்சய் குமார் சிங் மற்றும் கிராமத்தின் பிரதான் சிவராஜ் யாதவ் ஆகியோரின் உதவியுடன் கிராம மக்களுக்கு 15 கிலோ அரிசி வழங்கினார்.

அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போது காங்கிரஸ் உறுப்பினருமான அஜய் ராய் சில நிவாரணப் பொருட்களையும் கிராம மக்களுக்கு அனுப்பியுள்ளார். பின்னர் பேசிய அவர், அந்த பகுதியில் உள்ளவர்கள் 2-3 நாட்கள் சாப்பிடவில்லை. நான் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு எம்.பி.யாக இருப்பதால், அருகிலுள்ள கிராமங்களில் செங்கல் சூளைகளில் பணிபுரியும் முசாஹர் சமூகத்தை இந்த திடீர் ஊரடங்கு எவ்வளவு மோசமாக பாதிக்கும் என்பது பற்றி அவர்களுக்கு விளக்கினேன். அதை மனதில் வைத்து, மூன்று நாட்கள் மதிப்புள்ள உணவை நான் வழங்கினேன் என்றார்.

மேலும், அந்த பகுதியில் உள்ளவர்கள் “சானிடிசர்கள்” போன்ற விஷயங்களைப் பற்றி கனவில் மட்டுமே பார்க்க முடியும். ஏனெனில் அவர்கள் கைகளைக் கழுவுவதற்கு சோப்புகள் கூட இல்லை. அதை மனதில் வைத்து, உணவு பொருட்களுடன் சில சோப்புகளையும் நான் அனுப்பி வைத்தேன் என்றுகூறினார்.

பிரதமரைத் தாக்கிய ராய், “இது அவருடைய தொகுதி. அவர் தனது தொகுதி மக்ககளுக்காக உரையாற்றினார், ஆனால் அவர் ஏழைகளை குறிப்பிட்டாரா? அவர் இந்த மக்களுக்காக ஏதாவது செய்தாரா? ” என்றும் கேள்வி எழுப்பினார்.

கார்ட்டூன் கேலரி