பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்துள்ளன.

சென்னை

டந்து முடிந்த மக்களவை தேர்தலில் படு தோல்வி அடைந்ததால் பாமக மற்றும்தேமுதிக கட்சிகள் மாநில அந்தஸ்தை இழந்துள்ளன.

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக அணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டி இட்டன. கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கபட்டன. களத்தில் இறங்கிய வேட்பாளர்களில் பாமக வின் அன்புமணி ராமதாஸ் மற்றும் திமுதிகவின் சுதீஷ் ஆகியோருக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் இந்த தேர்தலில் பாமக மற்றும் தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அதிலும் குறிப்பாக அன்புமணி மற்றும் சுதீஷின் தோல்வி பலருக்கும் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதில் தேமுதிகவுக்கு ஏற்கனவே மாநில கட்சி அந்தஸ்து அள்க்கப்பட்டிருந்தது. தற்போது போதிய வாக்குகள் எடுக்காததால் தேமுதிக அந்த அந்தஸ்தை இழந்தது.

இக்கட்சிகளில் பாமக முந்தய தேர்தல்களில் போதிய வாக்கு எடுக்காததால் பாமக மாநில கட்சியை இழந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் அந்த வாய்ப்பை பாமக இழந்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: DMDK, pmk, Regional party status
-=-