Random image

தேமுதிக ஆண்டுவிழா: தொண்டர்களுக்கு விஜயகாந்த் உருக்கமான கடிதம்

சென்னை:

தேமுதிகவின் ஆண்டுவிழாவையொட்டி கட்சித்தலைவர் விஜயகாந்த் தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.

அதில், லட்சக்கணக்கான தொண்டர்களுக்காக உயிர் வாழ்கிறேன்… அவர்களுடன் என் பயணம் தொடரும் என்று கூறி உள்ளார்.

நடிகர் விஜயகாந்த் 14 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கி தமிழகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால், அவரது உடல்நலப் பாதிப்பு காரணமாக தேமுதிக கட்சி தொய்வை சந்தித்து வருகிறது. தற்போதும், வீட்டில் சிகிச்சை பெற்ற வருகிறார்.

இந்த நிலையில்,தேமுதிகவின்  14வது ஆண்டு விழாவை ஒட்டி, அக்கட்சி தலைவர் விஜயகாந்த், தேமுதிக  தொண்டர்களுக்கு  கடிதம் எழுதி உள்ளார்.

அதில், விவசாயிகள், மீனவர் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை,  மணல் கொள்ளை,  மது விற்பனை, சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்முறை, சுகாதார பிரச்சினை என,எத்தனையோ பிரச்னைகள், தமிழகத்தில் தீர்வே இல்லாமல் உள்ளன.

இப்பிரச்னைகளை தீர்க்கவும், தமிழகத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் மக்களே இல்லைஎன்ற, நிலையை உருவாக்கவும், தே.மு.தி.க., தொடர்ந்து பாடுபடும். கட்சியினர், உண்மை விசுவாசத் தின் பிரதிபலிப்பாகவும், முன்எப்போதும் இருப்பதை காட்டிலும், பல மடங்கு ஒற்றுமையாக வும், உறுதியாகவும் இருக்க வேண்டும்.

வரப்போகும் தேர்தலில், தே.மு.தி.க., தவிர்க்க முடியாத கட்சி என்பதை, உழைப்பால் உணர்த்து வோம். உண்மையான கொள்கைக்காகவும், லட்சியத்திற்காகவும், என் மேல்கொண்ட பற்றின் காரணமாகவும், கட்சியில் உள்ள லட்சக் கணக்கான நல்லஉள்ளங்களுடன், என் பயணம் தொடரும்.

இவ்வாறு விஜயகாந்த் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.