நாடு முழுவதும் இன்று 70வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்தை வீடியோ செய்தியாக வெளியிட்டு உள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு, பேச முடியாமல் அவதிப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் போட்டோ, வீடியோ வெளியிட்டு தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில்,  ட்டின் 70வது குடியரசு தின  வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,  அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். லஞ்சமில்லாத ஆட்சி, யாருக்கும் அஞ்சாத நீதி, நேர்மையான தேர்தல், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மக்களோடு இணைந்து உருவாக்குவோம் என்று கூறி உள்ளார்.

விஜயகாந்தின் வீடியோவை தேமுதிக தொண்டர்கள்  சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.