சென்னை திரும்பினார் விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்

சென்னை:

மெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை சென்னை திரும்பினார். அவருக்கு தேமுதிக தொண்டரகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் பேச முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளானார். ஏற்கனவே  சிங்கப்பூர் உள்பட பல நாடுகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற சென்றார். அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்தது இன்று அவர் சென்னை திரும்பினார். அவரை வரவேற்க தேமுதிக தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். விஜயகாந்துக்கு  சிறப்பான வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தின் வழி நெடுகிலும் திரண்ட தொண்டர்கள் விஜயகாந்தை சிறப்பாக வரவேற்றனர்.

விரைவில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், தேர்தல்  கூட்டணி தொடர்பாக அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வரும் நிலையில், தேமுதிகவில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக விஜயகாந்த் விரைவில் திரும்புவார் என தொண்டர்கள் காத்திருந்த நிலையில், அவர் சென்னை திரும்பியிருப்பது தமிழக அரசியலில் களத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையில் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய விஜயகாந்த்,  நேராக வீட்டுக்கு போகாமல், அங்கிருந்த தொண்டர்களையும் சந்திக்காமல் விமான நிலையத்திலேயே தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.  இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ள நிலையில், நல்ல நேரம் பார்த்துதான் வீட்டிற்கு போக வேண்டும் என்பதற்காக அவர் காக்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது….