Random image

வரும் 30ம் தேதி தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்: தேமுதிக அறிவிப்பு

சென்னை: வரும் 30ம் தேதி தேமுதிகவின் தேர்தல், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடக்க உள்ளது.  தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தங்களது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வியூகங்களின் அடிப்படையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்சி மேலிடமும் கூட்டணி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியும் நடத்தி வருகின்றன. இந் நிலையில் ஜனவரி 30ம் தேதி தேமுதிகவின் தேர்தல் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் காலை 10.45 மணிக்கு ஆலோசனை நடைபெறும் என்று தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.