Random image

தே.மு.தி.க. – ம.ந.கூட்டணி.. டோட்டல் டெபாசிட் காலி

201605120120559933_Participation-in-the-6-party-leaders-summit-in-Trichy_SECVPF
சென்னை: தாங்கள்தான் மாற்று அணி என்றும், விஜயகாந்த் தான் மாற்று முதல்வர் என்று தீவிர பிரச்சாரம் செய்து வந்த தே.மு.தி.க. – ம.ந.கூட்டணிக்கு டெபாசிட் கிடைக்காத அளவுக்கு படுதோல்வியை அளித்துள்ளனர் மக்கள்.

இக்கூட்டணி வேட்பாளர்களில் இருவர் மட்டுமே இரண்டாம்  இடத்தையாவது பிடித்துள்ளார்கள்.

விஜயகாந்த்தின் தேமுதிக, வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை இணைந்து அமைத்த கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது.  ஆனால் எந்த  ஒரு தொகுதியிலும் அக் கூட்டணி  வெற்றி பெறவில்லை.
தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தளி ராமச்சந்திரனும், காட்டுமன்னார் கோயில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் மட்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்கள்.

இவர்களை தவிர விஜயகாந்த் உள்ளிட்ட எந்த ஒரு மக்கள் நல கூட்டணி மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களும் இரண்டாவது இடத்தை கூட பிடிக்க முடியவில்லை

மேலும் இக் கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வின் வாக்கு வங்கி பலமாக சரிந்திருப்பதும், மற்ற கட்சிகள், நோட்டாவைவிட குறைந்த வாக்கு சதவிகிதத்தை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.