‘’தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்பு’’ –தே.மு.தி.க,.

‘’தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்பு’’ –தே.மு.தி.க,.

தே.மு.தி.க. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில்  சிறு கட்சிகளுடன் உடன்பாடு வைத்தது.

அந்த கட்சிகள் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்திருந்தது.

அந்த கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

கடந்த மக்களவை தேர்தலில் அ.தி.மு.கவுடன். இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.க.ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை

இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் எல்.கே.சுதீஷ்’’ அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தே.மு.தி.க.வின் கூட்டணி குறித்து கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் ஜனவரி.மாதம் அறிவிப்பார்’’ என்று தெரிவித்தார்.

”கூட்டணி தொடர்பாக டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் நடைபெறும் தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்கப்படும்’ என்று சுதீஷ் மேலும் கூறினார்.

-பா.பாரதி.

கார்ட்டூன் கேலரி