தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு….!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு லேசான அறிகுறியுடனான கொரோனா பாதிப்பு இருந்தது. இதனால் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்துடன், பிரேமலதா உடன் இருந்து கவனித்து வந்தார். கொரோனா பாதிப்பில் இருந்து விஜயகாந்த் குணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உடனடியாக மியாட் மருத்துமவனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.