விஜயகாந்த் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்பவேண்டாம்!: குடும்பத்தினர் அறிவிப்பு

சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டுசெல்லப்பட்ட விஜயகாந்த்  உடல் நிலை குறித்த வதந்தகளை நம்ப வேண்டாம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில மாதங்களாகவே  உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு சிகிச்சையில் முன்னேற்றமில்லாததால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில்,  அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு முதல் அவரது உடல் நலம் முன்னேற்றம் இல்லை எனவும் அவரை சந்திப்பதற்காக உறவினர்கள் அமெரிக்கா விரைந்துகொண்டிருப்பதாகவும் வதந்திகள் பரவின

இச்செய்திகளை விஜயகாந்த் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அமெரிக்க மருத்துவர்களின் சிகிச்சையால விஜயகாந்த் உடல்நலத்தில் முன்னேறறம் ஏற்பட்டிருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.