உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்க: உச்சநீதி மன்றத்தில் திமுக மீண்டும் புதிய மனு

டெல்லி:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை கோரி திமுக உச்சநீதி மன்றத்தில் இன்று புதிய மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது..

தமிழகத்தில்  ஊரகப்பகுதிகளுக்கு மட்டும்  உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கடந்த 2ந்தேதி தேர்தல் தேதியை அறிவித்து உள்ளார். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

இந்த நிலையில்,  உள்ளாட்சி தேர்தல் அறிக்கையை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 5 புதிய மாவட்டங்கள் உருவானதை காரணம் காட்டி கடந்த 2ந்தேதி திமுக  உச்சநீதிமன்றத்தில் தேர்தலுக்கு தடை கோரி மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனு நாளை (5ந்தேதி)  விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், இன்று புதிய மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  தேர்தல் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.