சென்னை:

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நேற்று சென்னையில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்ற நிலையில், அதுகுறித்து,  திமுக தலைவர்  மு.க. ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது 3 பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

ஐபிசி செக்சன் 143, 188, 341 என்ற பிரிவில் மு.க. ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சித்தலைவர்கள், முக்கிய நபர்கள் என சுமார்  8000 பேர் மீது வழக்குப்பதிவு. செய்யப்பட்டு உள்ளது.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்,  சென்னை எழும்பூரில் திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி உள்பட கூட்டணி கட்சித்தலைவர்கள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர்,

இந்த நிலையில் பேரணி தொடர்பாக மு.க.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. பேரணியில் சட்டவிரோத கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை மதிக்காதது, உள்ளிட்ட 143, 188, 341 என்ற பிரிவில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.