தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி: இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

சென்னை:

மிழகத்தில் திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 34 இடங்களை கைப்பற்றும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிவு இன்றுடன் முடிவடைந்துள்ளது. அதேவேளையில், தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது.

தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர தேர்தல் நடைபெற்ற  38 தொகுதிகளில்  தேர்தல் நடை பெற்றது.  இந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் தலைமையிலான ஒரு அணியும், அதிமுக பாஜக தலைமை யிலான ஒரு அணியும் தேர்தலை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவை தொடர்ந்து, தற்போது தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியாகி வருகிறது. இதில்,  திமுக கூட்டணி குறைந்த பட்சம் 34 தொகுதிகள்  என்றும் அதிக பட்சமாக 38 தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக இந்தியா டுடே  தெரிவித்து உள்ளது.

அதிமுக கூட்டணிக்கு குறைந்தபட்சம்  ஜீரோ என்றும், அதிக பட்சமாக 4 தொகுதிகள் கிடைக்கலாம் என்றும்  தெரிவித்து உள்ளது.

அதுபோல என்டிடிவி வெளியிட்டுள்ள  தேர்தல்கணிப்பில்,  திமுக கூட்டணி:  25க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என்றும் அதிமுக கூட்டணி 12 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது.