பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்! திருமாவளவன்

சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சி போட்டியிடும் 20 தொகுதிகளிலும், திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகளும் அரசியல் கட்சிகள் இடையே தீவிரமடைந்துள்ளது. தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி இடையே தான் போட்டி நிலவுகிறது.  மநீம தலைமையில் த 3-வது அணி திடீரென உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிடப்போவது யார் என்பது குறித்த உத்தேச பட்டியலும் வெளியாகி உள்ளது. அதுபோல திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ், மதிமுக, மா.கம்யூனிஸ்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது,

இந்த நிலையில்  செய்தியளார்களை சந்தித்த திருமாவளவன், மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் அ.தி.மு.க. ஆதரவு அளிக்கிறது. அவர்களால் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. இது அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தவில்லை. தமிழகத்தில் பா.ஜனதா ஒரு தொகுதியில் 10 ஆயிரம் ஓட்டுகள் கூட வாங்க முடியாத பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.   பா.ஜனதா போட்டியிடும் 20 தொகுதிகளிலும்  தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

தமிழகத்தில் பாஜகவில், ரவுடிகள், சினிமாவில் வாய்ப்பு குறைந்தவர்கள் உள்ளிட்டவர்களை சேர்த்து கட்சி வளர்ந்து விட்டதாக தெரிவித்து வருகிறார்கள் ,

பின்னர் செய்தியளார்களை திருமாவளவனை கமல் அழைத்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய திருமா,  விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதும், என் மீதும் கமல்ஹாசன் வைத்திருக்கும் எண்ணத்துக்கு நன்றி. ஆனால் வெற்றி கூட்டணியில் 6 தொகுதிகள் பெறுவதற்கும், தோல்வி கூட்டணியில் 25 தொகுதிகள் பெறுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன என்று மநீம கூட்டணியை தோல்வி கூட்டணி என விமர்சித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.