நாடாளுமன்ற தேர்தல்: திமுக, அதிமுக நாளை தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு  திமுக, அதிமுக கட்சிகள்  நாளை தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது. அதுபோல அதிமுக சார்பிலும் நாளை தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக அறிக்கை:

இதுகுறித்து திமுக தலைமை விடுத்துள்ள அறிக்கையில், பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணியளவில் வெளியிடப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்திக்கிறார்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

அதிமுக அறிக்கை:

அதிமுக கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைமை அலுவலகம்  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.