வேலூர்

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளார் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகம் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்ப்பட்டுள்ளன.

வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டு தற்போது மீண்டும் தேர்தல் அறிவிப்பு வெளியாகி இந்த மாதம் 18 ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறவடைந்துள்ளது.  திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏசி சண்முகம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட பலர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று நடந்த வேட்பு மனு பரிசீலனையில் கதிர் ஆனந்த் மற்றும் சண்முகம், ஆகியோரின் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதிமுக அல்லாத ஏ சி சண்முகம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.  கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட போது கதிர் ஆனந்த் இல்லத்தில் ரூ.11.47 கோடி கைப்பற்றப்பட்டதால் எதிர்ப்பு எழுந்தது.  இதை ஒட்டி இருவர் மனுவின் பரிசீலனையும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் அதிகரி சண்முக சுந்தரம் கதிர் ஆனந்த் மற்றும் ஏ சி சண்முகம் ஆகியோரின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்துள்ளார்.