புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக உள்ளது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து

புதுச்சேரி: புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக உள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டு உள்ளது. இந் நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரசுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது.

பேச்சுவார்த்தையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி சுப்பிரமணியன், திமுக நிர்வாகிகள் சிவா, சிவக்குமார் உள்ளிடோர்  கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்போம். புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக உள்ளது என்றார்.