இந்தி திணிப்புக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

சென்னை:

த்தியஅரசின் இந்தி திணிப்புக்கு எதிராக  வரும் 20ந்தேதி தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என்று கடந்த 12ந்தேதி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு பிரச்சினை மற்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின்  இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மத்திய அரசைக் கண்டித்து செப்.20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.