சென்னை:

கடந்த சனிக்கிழமை, தமிழக சட்டப்பேரவையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரினார். திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்புக் கோரினர். இதையடுத்து அவையில் அமளி ஏற்பட்டது. திமுக உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதன்பின்னர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்

நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரியும், தி.மு.க  எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது குறித்தும், அந்தக் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, ‘தி.மு.க-வின் இந்த முறையீடு, நாளை அவசர வழக்காக விசாரிக்கப்படும்’ என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.