தொண்டர்கள் கலைந்து செல்ல மறுப்பு…..மருத்துவமனையில் இருந்து ஸ்டாலின் புறப்பட்டார்

சென்னை:

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு பின்னடைவு ஏற்பட்டது. தவகலறிந்த திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள், கருணாநிதி குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்தனர். இதைதொடர்ந்து கருணாநிதியின் உடல் நிலை மீண்டும் சீரடைந்துவிட்டது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

எனினும் தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து வருகின்றனர். போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் தொண்டர்களை கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்தனர். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. மருத்தவமனை உள்ளே இருந்து வெளிநபர்களை போலீசார் வெளியேற்றி மருத்துவனை வளாகத்தை போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

திமுக பொதுச் செயலாளர் பேராசியர் அன்பழகன் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை பார்த்தார். தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விடுத்த அழைப்பை தொண்டகள் ஏற்கவில்லை. இதை தொடர்ந்து அன்பழகன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவரை தொடர்ந்து ஸ்டாலினும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.