ஆலங்குடி திமுக வேட்பாளர் மாற்றம்

aalangudi

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் கோ.சதீஷ் மாற்றப்பட்டார். ஆலங்குடி தொகுதியில் சிவ.வீ.மெய்யநாதன் போட்டியிடுவார் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

ஆலங்குடி தொகுதி வேட்பாளராக சதீஷ் அறிவிக்கப்பட்ட நாள் முதற்கொண்டே அவரை மாற்றக்கோரி பிச்சை எடுக்கும் போராட்டம் உட்பட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய திமுகவினருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.