திமுக வேட்பாளர் நேர்காணல் இன்று தொடக்கம்… முதல்நாளில் தென்மாவட்டங்கள் பங்கேற்பு..

சென்னை: தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம், வேட்பாளர் நேர்காணல் இன்று  தொடங்குகிறது. அண்ணா அறிவாலயத்தில், காலை மாலைவ என இரு வேளைகளிலும் வேட்பாளர்ள் நேர்காணல் 6ந்தேதி வரை நடைபெற உள்ளது.

ட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அனைத்து கட்சிகளும் விருப்பமனு வாங்கி, வேட்பாளர்களை பரிசீலித்து வருகின்றன. அதன்படி,   தி.மு.க. சார்பில் போட்டியிட கடந்த மாதம் 17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு அளித்துள்ளார். துறைமுகம் தொகுதியில் உதயநிதி போட்டியிட விருப்பமனு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8,388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்ட நிலையில், 7 , 967 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில்,  வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் இன்று தொடங்குகிறது. திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் இன்று தொடங்குகிறது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நேர்காணலில் மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்

இன்று காலையில் கன்னியகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும், மாலையில் விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் வேட்பாளர் தேர்வு நடக்கிறது.