திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு ரூ.115 கோடி, 2 கிரிமினல் வழக்குகள் …! வேட்புமனுவில் தகவல்…

அரக்கோணம்:

ரக்கோணம் தொகுதிக்கு திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனின் சொத்து மதிப்பு ரூ.115 கோடி என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் ஜெகத்ரட்சகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவுடன் அவரது சொத்து மதிப்பும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், தனக்கு ரூ.115 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், இதில்  ஜெகத்ரட்சகன் பெயரில், ரூ.2 கோடியே 63 லட்சத்து 43 ஆயிரத்து 519 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.10 கோடியே 99 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அவரின் மனைவி அனுசுயா பெயரில் ரூ.43 கோடியே 16 லட்சத்து 29 ஆயிரத்து 747 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.57 கோடியே 91 லட்சத்து 4 ஆயிரத்து 631 மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாக அவர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வளவு சொத்துக்கள் இருந்தும், ஜெகத்ரட்சகன், தனது  மனைவியின் பெயரில், 16 கோடியே 63 லட்சத்து 65 ஆயிரத்து 972 ரூபாய் கடன் தொகை இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

அத்துடன் அவர் மீது 2 கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.