தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் வேட்புமனுத் தாக்கல் செய்தார்

சென்னை,

ர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. வரும் 4ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை என்பதால், முக்கிய அரசியல் கட்சியினர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

அதிமுக, திமுக, டிடிவி தினகரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்பட்டது.

ஏற்கனவே பல சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், நாம் தமிழ்ர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், தி.மு.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட  மருது கணேஷ் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சுமார் 12 மணிக்கு மேல் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

சென்னை தண்டையார்பேட்டையில் தேர்தல் நடத்துல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்

வேட்புமனு தாக்கல்செய்ய டிசம்பர் 4-ம் தேதி இறுதி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 5-ம் தேதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 7-ம் தேதி கடைசிநாள். வாக்குப்பதிவு டிசம்பர் 21ந்தேதி நடைபெறுகிறது.