திமுக சஸ்பென்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை:  

சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளருக்கு ஐகோட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

hightocur+sectr

சட்டசபை அமளி காரணமாக திமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் ஒரு வார காலம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இது தொடர்பாக ஐகோர்ட்டில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  வழக்கை விசாரித்த் தலைமை நீதிபதி  திமுகவை சேர்ந்த 79 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பென்ட்  செய்யப்பட்ட வழக்கில் சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும் வரும் செப்டம்பர் 1ம்  தேதி பதில் தருமாறும், எம்.எல்.ஏ.க்கள் சஸ்பென்ட் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் ஆஜராகி வாதாடினார். 79 எம்.எல்.ஏ.க்களை சஸ்பென்ட் செய்தது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.