சபாநாயகருக்கு செக் வைச்சுட்டோம்: ஓட்டப்பிடாரத்தில் ஸ்டாலின் பேச்சு

ஓட்டப்பிடாரம்:

ட்டப்பிடாரம் இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து வாக்கு வேட்டையாடி வரும், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, சபாநாயகருக்கு செக் வைச்சுட்டோம் என்றும் கூறினார்.

தமிழக்ததில் காலியாக உள்ள  4 தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் விறுவிறுப்பான பிரசாரத்தை தொடங்கி உள்ளன. திமுக சார்பில், தலைவர் மு.க.ஸ்டாலினும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும் நேற்று தங்களது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், ஒட்டப்பிடாரம் திமுக வேட்பாளர் சண்முகையாவிற்கு ஆதரவாக வாக்காளர்க ளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார். அப்போது, அதிமுக ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதறக்காகவே 4 தொகுதி இடைத்தேர்தல் தாமதாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டியவர்,  ஏற்கனவே நடத்தப்பட்ட 18 தொகுதி இடைத்தேர்தலுடன் சேர்ந்து இங்கு தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் 22 தொகுதிகளில் தேர்தல் நடத்தால் திமுக வென்றுவிடும் என்பதால் நடத்தப்படவில்லை என்றார்.

திமுகதான் உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட பிறகே, 4 தொகுதிகளில் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டதாக கூறியவர், ஆட்சியை காப்பாற்ற எண்ணிஆளுங்கட்சி, 3 பேரை குறைக்கலாமா என்று எண்ணி  நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்றார்.

ஆனால், அதிமுகவின் சதியை திமுக புரிந்துகொண்டதால், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை என்றால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே அவருக்கு ஒரு செக் இப்போது வைத்திருக்கிறோம் என்றவர், ஆனால் அதையும் மீறி ஜனநாயகத்தை கடைபிடிக்காது என்றும், தற்போது முடிவடைந்துள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெல்லும், அதேபோல் திமுகதான் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வெல்லப்போகிறது என்ற தகவலும் வந்திருக்கிறது.

இதன் காரணமாகவே திரிசங்கு நிலையில் உள்ள அதிமுக ஆட்சி, குறைந்தது 5 இடங்களிலாவத வெற்றி பெற வேண்டிய நோக்கில், 3 எம்எல்ஏக்களை குறைக்க திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும்,  ஆனால்,  திமுக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக இப்போது போராடி வருகிறது. இதற்காகத்தான் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருகிறோம். தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்வோம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

கார்ட்டூன் கேலரி