ஜெயலலிதா புகழ் என்றும் நிலைத்திருக்கும்: கருணாநிதி இரங்கல்

மிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்  நேற்று இரவு காலமானார்.

1

அவரது மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கட்சிகளைப் பொறுத்து வேறுபாடுகள் இருந்தாலும்,அதிமுக கட்சியின் நலன்களுக்காக துணிச்சலோடு காரியங்களை ஆற்றியவர் ஜெயலலிதா என்பதில் யாருக்கும் வேற்றுக் கருத்து இருக்க முடியாது.

அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரை இழந்து வாடும் அவருடைய கட்சி தொண்டர்களுக்கும் லட்சக்கணக்கான தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.