கருணாநிதி உடல் நிலை நலிவு….காவேரி மருத்துவமனை

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி 2 ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த குழாய் அவருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கருணாநிதி உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,‘‘வயது மூப்பின் காரணமாக அவரது உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள்ய குழு அவரை வீட்டிலேயே கண்காணித்து வருகின்றனர். அவரை யாரும் பார்க்க வரவேண்டாம்’’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.