திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் காவேரியில் அனுமதி

சென்னை,

டல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

 

கருணாநிதிக்கு ஏற்கனவே மருந்துகள் ஒத்துக்கொள்ளாமல் ஒவ்வாமையால் (அலர்ஜி) அவதிப்பட்டார். அதையடுத்து மைலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசிசை பெற்று வந்தார். உடல்நலம் தேறியதை தொடர்ந்து கடந்த 7ந்தேதி வீட்டுக்கு திரும்பினார்.

வீட்டிலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து அவருக்கு சளித்தொல்லையால், மூச்சுவிட சிரமப்பட்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து அவர் நேற்று இரவு 11.10 மணி அளவில் மீண்டும் மயிலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவருடன் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள்கள் கனிமொழி எம்.பி., செல்வி, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர்  அவருடன் மருத்துவமனையில் உள்ளனர்.