சேலம்,

சேலத்தில் ஊரடங்கு விதியை மீறி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய முதல்வர் பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவினர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள்னர்.

கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கபடு வருகின்றன.  இதையொட்டி நேற்று சேலத்தில் அனைத்து துறை அதிகாரிக்ளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி உள்ளார்.  இந்த ஆலோசனைக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவாலகத்தில் 30 க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளுடன் நடந்துள்ளது.

இதற்கு அம்மாவட்ட திமுக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி சேலம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மற்றும் சட்டப்பேரை உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து செய்தியாளர்களிடம். “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் கலெக்டர் ஆபீசுக்கு வருகை தந்து,  30க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை கொண்டு கூட்டத்தை நடத்தி இருக்கிறார். தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கிறது.  முதல்வர் இச்சட்டத்தை மீறும் வகையிலும், பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறும் வகையிலும் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் இரு தினங்களுக்கும் அனைத்துக்கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் அரசு விதிமுறைப்படி கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதல்வர் அப்போது காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு, அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தக்கூடாது என்று அரசியல் உள்நோக்கத்தோடு, அந்த கூட்டத்தை தடுத்தார்.

சுமார் 11 பேர் கலந்து கொள்ளும் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தவிடாமல், அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்ட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுமார் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகளை கொண்டு கூட்டத்தை நடத்தி இருப்பது எந்தவிதத்தில் நியாயம்? .

ஆகவே, கூட்டத்தை நடத்திய முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர், சேலம் மாநகர காவல் ஆணையர், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.