சென்னை குலுங்கியது: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான திமுக, காங். கூட்டணி கட்சிகளின் பிரமாண்ட பேரணி – புகைப்படங்கள்… வீடியோ

சென்னை:

த்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இன்று காலை சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், திமு.க காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியின் பங்குகொண்டு பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

லட்சக்கணக்கானோர் குவிந்த இந்த மாபெரும் பேரணி தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இங்கே தொகுக்கப்பட்டு உள்ளது.

பாஜக அரசின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தி.மு.க. தலைமையில் மாபெரும் கண்டன பேரணி காலை 10-15 மணி அளவில் தொடங்கி 11-15 மணி அளவில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் முடிவடைந்தது.

பேரணியில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த பேரணியால் சென்னை மாநகரமே குலுங்கியது. லட்சக்கணக் கானோர் பேரணியில் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்க மிட்டனர்.

அரசியல் கட்சிகளின் தொண்டர்களுடன்  ல்.பி.எஃப், சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம் பங்கேற்பு. மாணவர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்காணோர்  பங்கேற்று குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அணிவகுத்தனர்.

பேரணியில் முழக்கம்! “பிரிக்காதே பிரிக்காதே மண்ணின் மக்களைப் பிரிக்காதே” என குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் முழக்கம்!

”மதச்சார்பற்ற இந்தியாவை இந்து தேசமாக மாற்றாதே! என குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் முழக்கம்! எழுப்பப்பட்டது.