மிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருவர்  நடிகை குஷ்பூ. பெண்ணியவாதியாக மாறி அவ்வப்போது அதிரடி கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்துபவர். சினிமாத் துறையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு சொந்தமானவர். திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்தபோது,  மறைந்த பிரபல நடிகர் வாரிசு ஒருவருடன்  காதல்,  அவரை மணம் செய்ய்யப் போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது. பின்னர் எச்சரிக்கப்பட்ட நிலையில், வேறு ஒருவரை மணம் முடிக்கப்போவதாக தகவல்கள் பரவியது. ஆனால்,  அவர் திடீரென  இயக்குனர் சுந்தர் சி-ஐ திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வதில் தவறு இல்லை என்றும், செக்ஸ் விசயத்தில் சென்னை பெண்கள் பின் தங்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லி கடந்த 2015ல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகை குஷ்பு. தற்போது இரு மகள்களுக்கு தாயானதோடு சினிமாவிலும் தொடர்ந்து  சினிமா நடிப்பதிலும், சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இருந்தாலும், சைடு பிசினசாக அரசியலும் கால்பதித்து அலப்பறை செய்து வருகிறார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்போது  அவருடன்  நெருக்கமானார். அதன் காரணமாக ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இதன் காரணமாக அதிமுகவில் ஜெ. இணைய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட பிசினஸ் தகராறு காரணமாக,  ஜெயலலிதாவில்  துரதப்பட்டார்.
அதைத்தொடர்ந்து,   கடந்த 2010-ம் ஆண்டு மே 15ம் தேதி தான் அரசியலில் இணையபோவதாக அறிவித்த குஷ்பூ, கருணாநிதி முன்னிலையில், திமுகவில் இணைத்து கொண்டார். ஜெ.விடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவே அவர் திமுகவில் இணைந்ததாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து திமுகவின்,  கலைஞர் டிவியின் மானட மயிலாட நிகழ்ச்சி நடுவராகவும், அங்கே தொடர்களை தயாரித்து நடிக்கவும் தொடங்கினார். குஷ்புக்கு திமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் பதவி வழங்கி அழகு பார்த்தார் கலைஞர் கருணாநதி,
இந்த நிலையில், கடந்த 2011 சட்டசபை தேர்தல் மற்றும் 2014 லோக்சபா தேர்தல்களில் திமுகவுக்காக பிரசாரம் செய்தார். 2014ம்  ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், குஷ்புவுக்கு சென்னையில் போட்டியிட வாய்ப்பளிக்க கருணாநிதி விரும்பியதாக கூறப்பட்டது. இது கோபால புரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், குஷ்புவை முன்னிலைப்படுத்த ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்த்தோடு வேட்பாளர்களையும் அவரே தேர்வு செய்தார். எனவே குஷ்புவின் கனவு நிறைவேறாமல் போனது.
கருணாநிதி மீது அதிக அக்கறை எடுத்துக்கொண்ட குஷ்புவின் நடவடிக்கை கோபாலபுரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருந்தாலும்,   திமுக., சம்பந்தப்பட்ட அனைத்து கட்சி மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்று வந்தார். இருந்தாலும், திமுகவுக்காக ஓட்டு வேட்டையாட அனுமதிக்கப்பட்டார்.  கடந்த 2014ம் ஆண்டு  நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக கூட்டணி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என தமிழகத்தில் ஐந்து முனை போட்டி நிலவியது. திமுகவின் பிரச்சார பீரங்கியான நடிகை குஷ்பு, பாஜகவையும், மோடியையும் விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தார். ஆனால், தேர்தல் பிரசாரத்தில் அவரது உளறல் கட்சிக்கு பின்னடை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குஷ்பு, ” திமுகவுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. திமுக தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும். தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் (மு.க. ஸ்டாலின்) இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்” என்று கூறியிருந்தார். இது கோபாலபுரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதன் பாதிப்பு, திருமணம் ஒன்றிற்கு திருச்சிக்கு சென்ற குஷ்பு, அங்குள்ள ஓட்டலில் வைத்து திமுகவினரால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக, அங்கிருந்து விலகிய குஷ்பு  திமுகவிலிருந்து கனத்த இதயத்தோடு விலகுவதாக பிரபல நடிகை குஷ்பு அறிவித்தார்.

இருந்தாலும், கருணாநிதி மறைவுக்கு பிறகு, அவரது நினைவுகூட்டத்தில் கலந்துகொண்ட பேசிய குஷ்பு தனக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்ட கொள்கைகளை கற்றுக்கொடுத்தவர் கருணாநிதி என நினைவு கூர்ந்தார். தாம் அரசியலை கற்றுக்கொண்ட இடம் திமுக தான் என்று கூறி திமுகவை பெருமைப்படுத்தினார்.
இதற்கிடையில், குஷ்பு, மோடியின் டுவிட்டர்களை ரீடிவிட் செய்வதில் அதிக அளவில் ஆர்வம் காட்டத்தொடங்கினா. “நாட்டின் முன்னேற்றத்துக்கு பெண்கள் பங்களிப்பு அவசியம். வீட்டை கவனிப்பது மட்டுமே பெண்களின் வேலை என்ற நிலை இப்போது மாறிவிட்டது. நாட்டை உருவாக்குபவர்களாக பெண்களை நாம் பார்க்க வேண்டும்” என்பது ஜனவரி 19ம்தேதி மோடி செய்த டுவிட். அதை தேடிபிடித்து இன்று குஷ்பு ரீடுவிட் செய்தார். அதுபோல ஸ்மிருதி ராணி கல்வித்தகுதி சர்ச்சையில், அவருக்கு ஆதரவாக டிவிட் போட்டார், அதுபோல சுஷ்மா சுவராஜ் குறித்தும் பெருமை பேசினார். இதனால், குஷ்பு  பாரதிய ஜனதா கட்சியில் சேருவார் என  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேரம் படியவில்லையோ என்னவோ, குஷ்பு காங்கிரஸ்கட்சியில் இணையப்போவதாக அறிவித்தார்.

திமுகவில் இருந்து சமீபத்தில் விலகுவதாக அறிவித்த குஷ்பு, பின்ன்ர காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.  கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி  அன்று தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது, இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி காங்கிரஸ்தான் என்று புகழுரைத்தார்.  குஷ்பு காங்கிரசில் சேரும் சமயத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் உடனிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு,  காங்கிரஸ் கட்சியில் இணைவது தனக்கு தன் வீடு திரும்புவது போன்ற ஒரு அமைதி மற்றும் நிம்மதி கிடைத்திருப்பதாகத் தெரிவித்ததுன், தான்  பாரதீய ஜனதா கட்சியில் சேர உள்ளதாக தகவல்கள் அனைத்தும்,  செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி என்று தெரிவித்தார். இது நீண்டநாள் யோசித்து எடுத்த சரியான முடிவு. திமுகவில் இருந்து விலகினேனே தவிர அரசியலைவிட்டு விலகவில்லை என்றும் டயலாக் பேசினார்.

அதுபோல, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவனும்,  குஷ்பு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்த, அவரது வருகை காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில், சென்னையில் உள்ள தொகுதியைப் பெற்று போட்டியிட குஷ்பு விரும்பியதாகவும், ஆனால் கூட்டணி கட்சியான திமுக அதை தடுத்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின. அதனால், குஷ்பு அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. அதே நேரத்தில்,   மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த  நடிகை ஊர்மிளாவுக்கு  உடனே போட்டியிட்ட வாய்ப்பு கொடுக்கப்பட்டது, அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது,  இதனால், தேர்தல் பிரசாரத்தை குஷ்பு தவிர்க்க விரும்பியதாகவும்,  காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலர் குஷ்புவை பிரசாரத்துக்கு அழைத்தும் அவர்  போக மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

பின்னர் தொடர்ந்து திரைப்படம், சின்னத்திரையும் கவனத்தை செலுத்தியவர், பெண்ணியவாதியாக அவ்வப்போது குரல் எழுப்பி பரபரப்பையும் ஏற்படுத்தி வந்தார். இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு,  எப்போது கடுமையாக உழைக்க கூடியவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்? என்று டிவிட் பதிவிட்டு, காங்கிரஸ் கட்சியிலும் சலசலப்பை உருவாக்கினார்.  ‘காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, சச்சின் பைலட்டை நியமித்திருக்க வேண்டும்’ என, சமூக வலைதளங்களில், ராகுலுக்கு எதிராக எழுந்த கருத்துக்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆதரவு தெரிவித்திருந்தார். இது காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இருந்தாலும் பாஜகவுக்கு எதிரான சில கருத்துக்களை தெரிவித்து வந்த குஷ்பு, தமிழக பாஜக தலைவர்களான எச்.ராஜா, எஸ்.பி.சேகர் போன்றவர்களின் பெண்கள் தொடர்பான பதிவுகளுக்கும்  பதிலடி கொடுத்து வந்த குஷ்பு,  அவர்களுக்கு பதில் சொல்வது, தனது கவுரவத்துக்கு இழுக்கு என்றும் வீராவேசமாக பேசினார்.

’மோடிக்கு இருக்கும் விளம்பர வெறியால் அவர் இந்து மதக் கடவுள்களை எந்த அளவுக்குக் கேவலப்படுத்துகிறார்  பாருங்கள்’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் மோடி சிவனை வணங்கும் போட்டோவுடன் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடந்த சிலநாட்களாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்திதொடர்பாளரான குஷ்பு, பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக ஆசிபா குறித்து குஷ்பு கூறிய கடுமையான விமர்சனம் பாஜகவினர்களை எரிச்சலை தந்தது. இருந்தாலும், புதிய கல்விக்கொள்கை உள்பட மத்திய பாஜகவின் பல திட்டங்களை வரவேற்று டிவிட் பதிவிட்டு வந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பாஜக தலைகள் குஷ்புக்கு வலைவீசத் தொடங்கின.  பாரதிய ஜனதா கட்சியில் நடிகை குஷ்பு இணைய வேண்டும்  சமீபத்தில், அக்கட்சியின் ஆசீர்வாதம் ஆச்சாரி திருக்குறளை மேற்கோள்காட்டி தூது விட்டிருந்தார்.  தொடர்ந்து அவர பாஜகவுக்கும் இழுக்கும் முயற்சிகள் தொடர்ந்து வந்தன.

இருந்தாலும் பிடிகொடுக்காமல் இருந்து வந்த குஷ்பு, கடந்தவாரம் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் கலந்துகொண்டதால், அவர் மீதான விமர்சனங்களுக்கு முற்றிபுள்ளி வைக்கப்பட்டது.

ஆனால், குஷ்புவோ தான் சொல்வதும், பேசுவதும் பொய்தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து உள்ளார். இன்று பாஜகவில் இணையப்போவதாக தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக பதவி சுகத்தை அனுபவித்தவர், தற்போது அங்கிருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

தனது திரையுலக தொழிலுக்கு  தேவையான பாதுகாப்பை பெறும் நோக்கில், அவர் பாஜகவில் இணைய இருப்பதாக திரையுலக தகவல்கள் கசிந்து வருகின்றன. தமிழக அரசியலில், பெண்ணியம் பேசும்  நடிகை குஷ்புவும், தானும் ஒரு சாதாரண அரசியல்வாதிதான் என்பதை உறுதிபடுத்தி உள்ளார். 

வசதி மற்றும் பாதுகாப்புக்கு  ஏற்ப வர்ணத்தை மாற்றும் பச்சோந்தி போல, குஷ்பு, தானும்  ஒரு அரசியல்  பச்சோந்தி என்பது இதன்மூலம உறுதிபடுத்தி உள்ளார்.