சென்னை:

மிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று காலை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை  சந்தித்து பேசினார்.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியினருக்கு போதிய வாய்ப்பு தரப்படவில்லை என்று குற்றம் சாட்டிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டார். இது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், நேற்று  டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், திமுக சார்பில் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தது.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அழைப்பின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  டெல்லி சென்றார். இன்று காங்கிரஸ் தலைமை யகத்தில் சோனியாவை சந்தித்த அவர் தி.மு.க. உடனான கருத்து மோதல் குறித்து விளக்கமளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி இணைந்த கரங்கள், இது ஒருபோதும் பிரிய வாய்ப்பு கிடையாது… குடும்பத்தில் ஊடலும், கூடலும் இருப்பது சகஜம் என்றும் என்றும் விளக்கம் அளித்தார்.