அரசியல் போராட்டத்தில் இணைந்து செயல்படுவோம் – சோனியா

தற்போதைய அரசியல் போராட்டத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இணைந்து செயல்படவேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

soni

மறைந்த முன்னாள் தமிழகத்தின் முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேளர முதல்வர் பிரனாயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றன.

விழாவில் கலந்து கொண்ட சோனியா காந்தி கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து பேசினார். அப்போது, “ நவீன இந்தியாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கருணாநிதி சிலையை திறந்து வைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் செல்வாக்கு மிக்க அவர் தோல்வி அடைந்ததே இல்லை. உடன்பிறப்புகளுக்கு 7 ஆயிரம் கடிதங்கள், 75 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய பெருமைக்குரியவர்.

தமிழுக்கு செம்மொழி தந்தது தான் கருணாநிதிக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அவர் காங்கிரஸ் கட்சிக்கு தந்த ஆதரவு மற்றும் ஆலோசனைகளை மறக்க மாட்டோம். தற்போதைய அரசியல் போராட்டத்தில் இணைந்து செயல்படுவோம்.

ஜனநாகயகத்தை பாதுகாக்கவும், புதிய இந்தியாவை உருவாக்கவும் நாம் இணைந்துள்ளோம் என்பது இந்த நாட்டுக்கு நாம் தெரிவிக்கும் செய்தியாக அமைய வேண்டும் ” என்று சோனியா பேசினார்.

பேச்சின் முடிவில் தமிழில் நன்றி, வணக்கம் என அவர் கூறினார்.