தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் முடிவு

சென்னை: திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, திமுக – காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஆனால், எந்தெந்த தொகுதி என்ற விபரங்கள் இன்று அறிவிக்கப்படவில்லை. அவற்றை, நாளை திமுக அறிவிக்கும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அவற்றில், புதுச்சேரி ஒன்று என்பதால், தமிழகத்தில் போட்டியிடக்கூடிய 9 தொகுதிகளை அடையாளம் காணுவதற்கு, 2 கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

காங்கிரஸ் சார்பில், கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற கட்சித் தலைவர் ராமசாமி மற்றும் தங்கபாலு ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்றது. திமுக குழுவில் மொத்தம் 6 பேர் இடம்பெற்றிருந்தனர். தற்போது, பேச்சுவார்த்தை முடிவடைந்து, ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

ஆனால், எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படவில்லை. அந்த விபரங்களை நாளை திமுக அறிவிக்கும் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி